இம்மானுவேலே வாரும் வாருமே

1.
இம்மானுவேலே வாரும் வாருமே
மெய் இஸ்ரவேலைச் சிறை மாளுமே
மா தெய்வ மைந்தன் தோன்றும் வரைக்கும்
உன் ஜனம் பாரில் ஏங்கித் தவிக்கும்

மகிழ்! மகிழ்! சீயோனின் சபையே
இம்மானுவேலின் நாள் சம்பவமே

2.
ஈசாயின் வேர்த் துளிரே வாருமே
பிசாசின் வல்ல கீரிடம் நீக்குமே
பாதாள ஆழம் நின்று இரட்சியும்
எம் சாவின்மேல் பேர் வெற்றி அளியும் – மகிழ்!

3.
அருணோதயமே ஆ வாருமே
வந்தெங்கள் நெஞ்சை ஆற்றித் தேற்றுமே
மந்தார ராவின் மேகம் நீக்கிடும்
இருண்ட சாவின் நிழல் ஓட்டிடும் – மகிழ்!

4.
தாவீதின் திறவுகோலே வாருமே
விண் வாசலைத் திறந்து தாருமே
ஒடுக்கமாம் நல்வழி காத்திடும்
விசாலமாம் துர்ப் பாதை துரத்திடும் – மகிழ்!

5.
மா வல்ல ஆண்டவா, வந்தருளும்
முற்காலம் சீனாய் மலைமதிலும்
எக்காளம் மின்னலோடு தேவரீர்
பிரமாணம் இஸ்ரவேலுக்களித்தர் – மகிழ்!



immanuvele varum varume

1.
immanuvele varum varume
mey isaravelais sirai malume
ma theyva mainthdhan thondrum varaikkum
un janam paril eengkith dhavikkum

makizh! makizh! seeyonin sabaiye
immanuvelin nal samapavame

2.
iisayin verth thulire varume
pisasin valla keeridam neekkume
pathala aazham nindru iradchiyum
am savinmel per vetrri aliyum – makizh!

3.
arunodhayame aa varume
vanththengkal nenjsai aatrrith thetrrume
manththara ravin mekam neekkidum
irunta savin nizhal ooddidum – makizh

4.
thaveethin thiravukole varume
vin vasalaith thiranththu tharume
odukkamam nalvazhi kaththidum
visalamam thurb pathai thurththidum – makizh!

5.
ma valla aantava, vanthdharulum
murkalam chanay malaimathilum
ekkalam minnalodu thevar
piramanam isaravelukkalithdhar – makizh!